தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் கடந்த “2012-ம் ஆண்டு முதல் 206.96 ஏக்கர் பரப்பளவில் 7 ஆண்டுகளாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் கட்டப்பட்டது.
இங்கு ஆடு, மாடு, கோழி, குதிரை, நாய், வாத்து, முயல், பன்றி, வான்கோழி, காடை என அனைத்து வகையான கால்நடை வளர்ப்புக்கும் தேவையான ஆலோசனைகளும், சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய கால்நடைகளுக்கான மருத்துவமனையும் இங்கு செயல்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகளையும் மற்றும் தங்கள் செல்ல பிராணிகளையும் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வருகின்றனர்.
நோய்களைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க நோயறி ஆய்வகம், நவீன அறுவைச் சிகிச்சைக்கூடம், ஊடு கதிரியக்கப் படக்கூடம், ஒலி அலைமானியுடன் கூடிய நவீனப் பரிசோதனை மையம், ஆம்புலன்ஸ் வசதினு எல்லாமே இங்க இருக்கு. செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைனு பல சிகிச்சைகளையும் இங்கு கொடுத்து வருவதால், இந்த ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துள்ளது.
மேலும், மிகப்பெரிய கால்நடைப்பண்ணையும் இங்கு செயல்பட்டு வருகிறது. ஜெர்சி கலப்பினப் பசுக்கள், முர்ரா எருமை மாடுகள், பட்டணம் மற்றும் மேச்சேரி செம்மறி ஆடுகள், தஞ்சாவூர் நாட்டின வெள்ளாடுகள், வெள்ளை யார்க்ஷையர் பன்றிகள், நாட்டுக்கோழிகள், வான்கோழிகள், நெருப்புக்கோழிகள், ஜப்பானியக் காடைகள், முயல்கள் ஆகியவையும் இங்கு உள்ளன.
1.84 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தீவன உற்பத்தி ஆலையும், ஒரு மாதத்துக்கு சுமார் 50 முதல் 80 டன் தீவனம் தயாரிச்சு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். பசுந்தீவனம், கோழித்தீவனம், ஆடுகளுக்கான தீவனம் மட்டுமல்லாமல். பன்றி, குதிரை, வாத்து, முயல், காடைனு எல்லாக் கால்நடைகளுக்கும் தீவனங்களைத் தயாரிச்சு விற்பனை செய்கிறார்கள். தரமான தீவனம் தயாரிக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்கிறார்கள். தீவனங்கள்ல இருக்குற சத்துகளை ஆய்வு செய்யக்கூடிய தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர நிர்ணய ஆய்வகமும் இங்கு உள்ளது.
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஜெர்சி கலப்பினப் பொலிகாளை, தாய்ப்பசு பண்ணை இங்கு அமைந்துள்ளது. தமிழக அரசின் சிறப்புத் திட்டத்துல உயர் ரக முர்ரா எருமை பொலிகாளை, தாய் எருமைப் பண்ணை இங்க அமைக்கப்பட்டிருக்கு. விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள், தொழில்முனைவோர்னு எல்லோருக்கும் வழிகாட்டுற மாதிரி… சுகாதாரமான பால் உற்பத்தி முறைகள், மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட இறைச்சி தயாரித்தல், பாரம்பர்ய இறைச்சிப் பொருள்கள் தயாரித்தல் போன்ற பணிகளும் இங்கு நடைப்பெற்று வருகிறது.
இப்படி இங்கு அதிநவீனமான அனைத்து வசதிகளும் இருந்தும், சமீப காலமாக கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால், இங்கு சிகிச்சைக்கு வரும் செல்ல பிராணிகள் செத்துமடியும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1.இங்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை.
2.பரிசோதனை மற்று ஆய்வக முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுவதில்லை.
3.ஊசி, மருந்து, மாத்திரைகள் மற்று பிற மருத்துவப் பொருட்களை தனியார் மருந்தகங்களில் வாங்கி வரும்படி பரிந்துரைப்பது மற்றும் நிர்பந்தம் செய்வது.
4.வெளி ஊர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து செல்ல பிராணிகளை சிகிச்சைக்காக இங்கு அழைத்துவரும் உரிமையாளர்களை இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள்? அங்கேயே காண்பிக்க வேண்டியதுதானே? என்று விரட்டும் கொடுமையும் இங்கு நாள்தோறும் நடைப்பெற்று வருகிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், இங்கு பணியாற்றும் தலைமை கால்நடை மருத்துவரும், பேராசிரியருமான செந்தில்குமார் தான் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பிராணிகளின் உரிமையாளர்கள்.
இங்கு டிசம்பர் முதல் வாரத்தில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த Fr.டேவிட் குடும்பத்தினரின் 13 வயது “பிளாட்டி” என்ற செல்ல நாய் தலைமை கால்நடை மருத்துவர் செந்தில்குமாரின் அலட்சியத்தாலும், தாமதத்தாலும், 3 முறை திருச்சிக்கும், ஒரத்தநாட்டிற்கும் அலைகழிக்கப்பட்டதாலும், முறையாக சிகிச்சை அளிக்கப்படாததாலும், பரிசோதனை ஆய்வக முடிகள் தாமதத்தாலும், டிசம்பர் 9-ந் தேதி அநியாயமாக இறந்து போனது.
கால்நடை மருத்துவர் செந்தில்குமார் இதுவரை பணியாற்றிய இடங்கள் அனைத்திலும் இதே குற்றச்சாட்டுகளைதான் கூறுகிறார்கள், அவர் தலைமையின் கீழ் பணியாற்றிய, பணியாற்றும் கால்நடை மருத்துவ பணியாளர்கள்.
வாயில்லா ஜீவன்களின் உயிரோடு விளையாடும் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் போன்றவர்களின் அலட்சியத்தால், தமிழக கால்நடை துறைக்கு பெருத்த களங்கம் ஏற்பட்டுள்ளது.
Dr.துரைபெஞ்சமின்,
Ex. Honorary Animal Welfare Officer, Govt Of India.