வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு!

இங்கு வெளியிட்டுள்ள படங்கள் அனைத்தும் இன்று (04.01.2020) காலை 10.30 மணியளவில் எடுக்கப்பட்டது.

வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படும் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதை முன்னிட்டுதிருச்சி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளே புறகாவல்நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறதுவைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடியற் காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து, ஏகாதசி அன்று மட்டுமே திறக்கும்சொர்க்க வாயில் என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று வழிபடுவர்.

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில்பகல்பத்து என்றும், பிந்தைய பத்து நாட்களில்இராப்பத்துஎன்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்கபரமபத வாசல், சொர்க்க வாசல்என்று அழைக்கப்படும் வடக்கு வாயில் வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த நாளிலே மட்டுமே இந்த வாயில் திறக்கப்படும்.

ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர்.

விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாக இருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப்போரின் துவக்கத்தில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

One Response

  1. MANIMARAN January 4, 2020 5:57 pm

Leave a Reply