இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட அனலதீவு வடக்கு கடல் பகுதியில், சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 3 படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்து அழைத்து வரப்பட்ட 11 இந்திய மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படையினர் மூலம் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்தராகவன்.