உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போதை பொருட் கடத்தல் மற்றும் விற்பனையாளர்களால் இலங்கை போதைப் பொருட்களின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. ஆனாலும், இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், யால, பலுகன்தலாவ பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, வனப்பகுதியில் 4 கஞ்சா தோட்டங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், கதிர்காமம் காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் அளித்தனர்.
அதன் பின்னர் காவல்துறை சிறப்பு பணிக்குழு அதிகாரிகளும், கடற்படையினரும் சேர்ந்து 4 கஞ்சா தோட்டங்களில் இருந்த கஞ்சா செடிகனை வேரோடு பிடுங்கி தீ வைத்து அளித்தனர்.
-என்.வசந்தராகவன்.
Good work, hands up to force