திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி “ஜீ கார்னர்” அருகே இன்று காலை 10.15 மணியளவில், முன்னால் சென்ற ஒரு கார் ஓட்டுநர் திடீரென காரை பிரேக் அடிக்க, அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக பின்னால் வந்த கார் ஓட்டுநர் பிரேக் அடிக்க, 3 ஆவதாக வந்த கார் ஓட்டுநர் கவனக் குறைவாக 2 ஆவதாக நின்ற கார் மீது திடீரென பலமாக மோதிய விபத்தில், 2 ஆவதாக நின்ற காரின் பின் பகுதியும், மோதிய 3 ஆவது காரின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திருச்சி ஜீ கார்னர் அருகில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதையடுத்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com