திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுர் வட்டம், பிச்சாண்டார் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தமர்கோவில் மற்றும் கூத்தூர் மேம்பாலத்திற்கு இடைபட்ட பகுதியில் இரயில்வே துறை சார்பாக தரைப்பால பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தரைப்பாலப்பணிகள் கிடப்பில் போட்டப்பட்டுள்ளது. பிச்சாண்டார்கோயில் கிராமத்தை சுற்றியுள்ள மக்களுக்கு முதன்மை சாலையாக இருக்கும் இந்த பாதையை கடந்துதான் கிராம மக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்துகொண்டிருக்கும் நிலையில், இரயில்வே நிர்வாகம் தரைப்பாலப்பணிகளை கிடப்பில் போட்டுள்ளது. மாற்றுப்பாதை ஏற்படுத்தி தராமல் இரயில்வே நிர்வாகம் தரைப்பாலப்பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
இப்பகுதிவாழ் மக்கள் ஆபத்தான முறையில் இருப்புப்பாதையை கடந்து தங்கள் குடியிருப்புகளுக்கும் மற்றும் அன்றாட பணிகளுக்கும் சென்று வந்துகொண்டிருக்கின்றனர்.
இரவு நேரங்களில் பணிமுடிந்து வீடு திரும்பும் மக்களுக்கு ஏதுவாக ஒரு மின்விளக்கு வசதி கூட இரயில்வே நிர்வாகமோ மற்றும் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி நிர்வாகமோ செய்து கொடுக்கவில்லை.
எனவே, இரயில்வே நிர்வாகம் தரைப்பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து மற்றும் அசாம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்குள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வது நல்லது.
– கே.பி.சுகுமார்.