அமெரிக்காவில் “கொரோனா வைரஸ்” தாக்குதல்!- 427,460 நபர்களுக்கு நோய் தொற்று!-14,696 பேர் மரணம்!- உடல் ஆரோக்கியத்தில் அக்கறைச் செலுத்தாத அமெரிக்கர்கள்.

Press Briefing with Coronavirus Task Force

Today's press briefing with the Coronavirus Task Force is up next.

Posted by The White House on Thursday, 9 April 2020

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [775.42 KB]

உலகமே நம் கைகளுக்குள் அடக்கம்!- நம்மை வெல்ல யாராலும் முடியாது!- எந்த ஆபத்துக்களும் நம்மை அணுகாது!’– என்ற ஆணவத்தோடும், அலட்சியத்தோடும், அகங்காரத்தோடும் செயல்பட்டு வந்த அமெரிக்க ஆட்சியாளர்கள், கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்குண்டப்பிறகு, இன்று எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

‘இதுவும் கடந்துபோகும்!- எதற்கும் தயாராக இரு!’-என்ற நம்பிக்கை வார்த்தைகளை மந்திரம்போல் அங்கு இப்போது உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆம்அமெரிக்காவில் உள்ள 1.அலபாமா 2.அலாஸ்கா 3.அரிசோனா 4.ஆர்கன்சஸ் 5.கேலிஃபோர்னியா 6.கொலராடோ 7.கனெக்டிகட் 8.டெலவேர் 9.ஃபுளோரிடா 10.ஜார்ஜியா  11.ஹவாய் 12.இடாகோ 13.இலினாய் 14.இன்டியானா 15.ஐயோவா 16.கன்சாஸ் 17.கென்டகி  18.லூசியானா 19.மேய்ன் 20.மேரிலண்ட்  21.மசாசுசெட்ஸ் 22.மிஷிகன் 23.மினசோட்டா 24.மிசிசிப்பி 25.மிசெளரி 26.மான்டனா 27.நெப்ராஸ்கா 28.நெவாடா 29.நியூ ஹாம்ஷயர், 30.நியூ ஜெர்சி,  31.நியூ மெக்சிகோ, 32.நியூ யார்க், 33.வட கரோலினா, 34. வட டகோட்டா, 35.ஒஹாயோ, 36.ஒக்லஹாமா, 37.ஒரிகன்,  38.பென்சில்வேனியா, 39.இறோட் தீவு, 40.தென் கரோலினா, 41.தென் டகோட்டா, 42.டென்னசி 43.டெக்சஸ், 44.உட்டா, 45.வேர்மான்ட், 46.வெர்ஜீனியா, 47.வாஷிங்டன், 48.மேற்கு வெர்ஜீனியா, 49.விஸ்கொன்சின், 50.வயோமிங் ஆகிய 50 மாநிலங்ளையும்  மற்றும்  கொலம்பியா, குவாம், புவேர்ட்டோ ரிக்கோ, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். விர்ஜின் தீவுகள் ஆகிய பகுதிகளையும் “கொரோனா வைரஸ்” விட்டு வைக்கவில்லை.

அமெரிக்கர்களின் சராசரி ஆயுள் காலம் பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது, மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட, ஒரு வருடம் குறைவானது. நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவை விட, மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். கடந்த 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள் கால வரிசைப்பட்டியலில் உலக அளவில் அமெரிக்கா 11-ம் இடத்தில் இருந்து 42-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதேபோல் குழந்தை இறப்பு ஆயிரம் பேருக்கு 6.37 என்கிற விகிதத்தில் உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. ஆம், 221 உலக நாடுகளில், அமெரிக்கா 42-வது இடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் வயதுக்கு வந்த குடிமக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாகவும், இன்னொரு பங்கினர் உடல் எடை மிகுந்தவர்களாகவும் உள்ளனர். மிக அதிகமான அளவு கொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் இரட்டிப்பாகியுள்ளது. உடல் பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது, அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் தொற்று நோயாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் விடலைப் பருவ கருத்தரித்தல் விகிதம் 1,000 பெண்களுக்கு 79.8 ஆக இருக்கிறது. இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும், ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும். விருப்பத்தின் பேரில் கருத்தடை இங்கு சட்டப்பூர்வமானதாக இருந்தாலும், அது இங்கு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்கள் இந்த கருத்தடை நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்துள்ளன. காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன, காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன. ஆனாலும், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் இங்கு 241 பேர் கருத்தடை செய்து கொள்கின்றனர். மேலும், 15 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1,000 பேருக்கு 15 பேர் கருத்தடை செய்து கொள்கின்றனர். அநேக மேற்கத்திய நாடுகளை விட  இது அதிகமான எண்ணிக்கையாகும்.

அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு, அனைத்து நாடுகளைவிட அதிகமான தொகையை சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைக்காக செலவிடுகிறது. தனி நபருக்கான செலவின அடிப்படையிலும் சரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகித அடிப்படையிலும் சரி, 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொறுப்புணர்வில் முதலிடத்தை அமெரிக்க சுகாதார அமைப்புக்கு அளித்தது. ஆனால், ஒட்டுமொத்த செயல்பாட்டில் 37-வது இடத்தைதான் அமெரிக்கா பிடிக்க முடிந்தது.

மேலும், மருத்துவத்துறை புதிய ஆராய்ச்சிகளில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது. 2004 ஆம் ஆண்டில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் தனிநபருக்கான செலவினத்தில் ஐரோப்பாவைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக தொழில்துறை அல்லாத பிரிவு செலவு அளித்தது.

ஆனால், ஆயிரம் இருந்தும், ஆயிரம் வசதிகள் இருந்தும் இன்றுவரை அமெரிக்க மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவில்லை என்பதைதான் இந்த கொரோனா கிருமி தொற்று பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன? ஒழுக்கமின்மையும், உடல் நலத்தில் அக்கறையில்லாதத்தன்மையும்தான்.

இது எதனால் வந்தது? என்று ஆராய்ந்தால், அமெரிக்கா பல்வேறு கலாச்சாரத்தை உள்ளடக்கிய தேசமாகும். பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள் மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக இது உள்ளது. இங்கு “அமெரிக்க” என்ற இனம் ஒன்று இங்கு இல்லை. இப்போது சிறு பூர்வீக அமெரிக்கர்கள் (அல்லது) பூர்வீக ஹவாய் தீவு மக்களைத் தவிர, ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்களும் மற்றும் அவர்களது முன்னோர்களும், கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்த மக்களிடம் உண்மையையும், ஒழுக்கத்தையும், தேசப்பற்றையும் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது என்பதுதான் இதுவரை உலக நாகரீகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம், படிப்பினை, பகுத்தறிவு! -இதற்கு அமெரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன?

-Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply