கொரொனோ வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல்-BHEL நிறுவனத்தில் ஆயிரத்து 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
அதில் முதல்கட்டமாக 500 பேருக்கு பெல்-BHEL தொமுச தொழிற்சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தீபன் தலைமையில் தலா.ரூ.500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் இன்று (மே 9) மாலை 6 மணியளவில் வழங்கப்பட்டது.
-ஆர்.சிராசுதீன்.
Great…..