இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சாம்பூர் மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
சாம்பூர் கடற்படை மரைன் படையின் தலைமையக வளாகத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறிய 98 நபர்கள், கொழும்பு குணசிங்கபுர, வேல்ல வீதி, கிராண்ட் பாஸ் மற்றும் நாகலகம் தெரு ஆகிய பகுதிகளிலும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிய 20 நபர்கள், ஜா ஏல பகுதியிலும் வசிக்கின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் அனைவரும், ஏப்ரல் 11 மற்றும் 16 ஆம் தேதிகளில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
-என்.வசந்த ராகவன்.
Take care of health all recovery patients, GOD BLESS YOU