ஜெயஸ்ரீ என்ற 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த இரக்கமில்லா அரக்கர்கள்!-விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் அருகே நடந்த பயங்கரம்.

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ.


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அருகே உள்ள சிறுமதுரை ஊராட்சியில் குச்சிப்பாளையம், சந்தைபேட்டை, சிறுமதுரை என்ற சிற்றூர்கள் உள்ளன.

இங்கு சிறுமதுரை கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஜெயபால் என்பவரின் 15 வயது மகள் ஜெயஸ்ரீ என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் அதிமுக கிளை கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து, ஜெயபால் குடும்பத்தினர் மீது இருந்த முன் விரோதம் காரணமாக, ஜெயஸ்ரீ இருந்த பெட்டிக் கடைக்குள் புகுந்து, ஜெயஸ்ரீயை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு நேற்று (10.05.2020) கொளுத்தியுள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்து கதறிய அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபாலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பதறியடித்து ஓடி வந்த ஜெயபால், திருவெண்ணைநல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார், ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயிடம், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுசம்மந்தமாக Cr.630/2020 வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், முருகன், ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த இரக்கமில்லா அரக்கர்களின் கொலை வெறிக்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த ஜெயஸ்ரீ பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN May 11, 2020 8:19 pm

Leave a Reply