தங்க மங்கையை இழந்து தவிக்கும் தமிழக காவல்துறை!

தலைமைக் காவலர் வனிதா.

சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த வனிதா, காவல் பணிக்கு இணையாக, விளையாட்டிலும் புகழ் பெற்று விளங்கினார்.

மூத்தோர் தடகளப் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் 150-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுக் குவித்தார்.

‘திறமையானவர்களையும், சாதனையாளர்களையும் காலம் பூமியில் நீண்ட நாள் விட்டு வைப்பதில்லை’- என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கிறது.

அந்த வகையில், தலைமைக் காவலர் வனிதாவின் வாழ்க்கையிலும் ஒரு பேரிடி விழுந்தது. ஆம், ஓடி ஓடி வெற்றிகளைக் குவித்த தலைமைக் காவலர் வனிதாவிற்கு ”மார்பகப் புற்று நோய்” அவரது முயற்சியை முடக்கிப் போட்டது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனது காவல் துறை தோழிகளின் உதவியாலும், அரவணைப்பாலும் புற்று நோயோடுப் போராடிக் கொண்டிருந்த தலைமைக் காவலர் வனிதா, 22.05.2020-ம் அன்று உயிரிழந்தார்.

விளையாட்டில் ஆயிரக்கணக்கான வீரர்களை வென்ற தலைமைக் காவலர் வனிதா, உயிர் போராட்டத்தில் எமனிடம் தோற்றுப் போனது துரிதஷ்டமே.

இந்த தங்க மங்கையின் இழப்பு தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்வே பேரிழப்பாகும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN May 25, 2020 9:59 pm

Leave a Reply