இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவவில்லை என பிரதமர் கூறுகிறார். சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள் 20 பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்து உள்ளனர். நம் நிலப்பரப்பை சீன ஆக்கிரமிக்கவில்லை என்றால், நம் வீரர்கள் எப்படி இறந்தனர்? இதற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.
பிரதமரும், மத்திய அரசும் தங்கள் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது. செயற்கைகோள் புகைப்படங்களும், இராணுவ நிபுணர்களும், நம் நிலப் பகுதிக்குள் சீன வீரர்கள் இருந்ததை உறுதி செய்கின்றனர். லடாக்கில் சீனா ஆக்கிரமித்த நம் பகுதியை மோடி அரசு எப்போது திரும்ப பெறும் என்ற கேள்விக்கு பதில் தேவை.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
சீனா-இந்திய எல்லை பிரச்சனை!- இராணுவ வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல்அனுப்பியது யார்? ராகுல் காந்தி கேள்வி.
நம் நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட, யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும், நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும் பிரதமர் கூறினார். லடாக்கில் வசிப்பவர்களும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும், சீனா, நம் நிலப் பகுதியை ஆக்கிரமித்து விட்டதாக கூறுகின்றனர்.
செயற்கைகோள் படங்களும் அதை உறுதி செய்கின்றன. நம் நாட்டுக்குள் ஒரு இடத்தை மட்டும், சீன வீரர்கள் ஆக்கிரமிக்கவில்லை; மூன்று இடங்களில் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி, இப்போதாவது இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். நம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என அவர் தொடர்ந்து கூறினால், அது சீனாவுக்கு சாதகமாகி விடும் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். இராணுவ வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் அங்கு அனுப்பியது யார்? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
-Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com.
இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ் காணும் இணைப்பை க்ளிக் செய்யவும். http://www.ullatchithagaval.com/2020/06/18/48608/