இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது, சேலத்தை பிரிக்கப்போவதாக வெளியான தகவல் தவறு!-ஈரோட்டில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தகவல்.

இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும், சேலத்தை பிரிக்கப்போவதாக வெளியான தகவல் தவறு என்றும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (17.7.2020) ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.21.73 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.76.12 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், சிறு, குரு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனும், ஈரோடு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுடனும், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply