”ஆனந்த பாக்கியம்” என்ற திட்டத்தின் கீழ் அமைப்புசாரா ஏழைத் தொழிலாளர்களுக்கு சுயதொழில் அமைத்து கொடுத்த, திருச்சி மதுரம் மருத்துவமனை நிர்வாகம்!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பொது முடக்கத்தால் , வேலையிழந்து வறுமையில் வாடிய ஏழை கிராப்புற மக்களுக்கு, திருச்சி மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐவன் கிறிஸ்டோபர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ”மதுரம் சுகாதார கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை” சார்பில், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 30 கிராமங்களில் 3,000 ஏழை, எளிய குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய அத்யாவசியப் பொருட்களை, மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐவன் கிறிஸ்டோபர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சர்மிளி பிரிசில்லா தலைமையிலான குழுவினர் நேரில் வழங்கினார்கள்.

இதற்கிடையில், ஜீலை முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் “கொரோனா வைரஸ்” தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்து கொள்வதற்காக, அவர்கள் பயன்படுத்தும் வகையில் 200 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் கைகளை சுத்தம் செய்வதற்கான திரவம், அதற்கான தானியங்கி கருவி ஆகியவற்றை, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியனிடம் வழங்கினார்கள்.

இந்நிலையில் ‘ஆனந்த பாக்கியம்” என்ற திட்டத்தின் கீழ் 19 அமைப்புசாரா ஏழைத் தொழிலாளர்களுக்கு, பெட்டிக் கடை, துணி வியாபாரம் மற்றும் பொரி கடலை வியாபாரம் செய்வதற்கு, அதற்கு தேவையானப் பொருட்களை ரூ.1.50 லட்சம் செலவில் வாங்கி கொடுத்துள்ளனர்.

-சி.அருண்குமார்.

Leave a Reply