பச்சிளம் குழந்தையை உயிரோடு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டி வீசியெறிந்த பரிதாபம்!- திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே நடந்த பயங்கரம்.

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிட ஆற்று கரையோரம் அமைந்துள்ள “யாத்ரி நிவாஸ்” கட்டிடம் அருகில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதி ஒன்றில், நேற்று முன்தினம் (24.09.2020) வெள்ளைத்துணியில் கட்டி வீசியெறிப்பட்ட துணி மூட்டை ஒன்று கிடந்தது. அந்த துணி மூட்டையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் சென்றவர்கள் அனைவரும் அதை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தப்படியே கடந்து சென்று கொண்டிருக்க, அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், துணிச்சலாக அருகில் சென்று அந்த துணி மூட்டையின் முடிச்சுகளை அவிழ்த்து பார்த்த போது, அதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், தொப்புள் கொடி ஈரம் கூட காயாத நிலையில், தொப்புள் கொடி முழுமையாக அகற்றப்படாத அவசரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று “தங்க விக்ரகம்” போல அதில் (இருந்தது) ஜொளித்தது . உடனடியாக அந்த துணி மூட்டையில் இருந்து அந்த பிஞ்சு குழந்தையை விடுவித்து, தன் இரு கரங்களால் குழந்தையை ஏந்தியபடி பிரதான சாலைக்கு கொண்டு வந்த அந்த ஆட்டோ டிரைவர், அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், குழந்தை உயிருடன் இருந்ததால், உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பிறகு “Childline Volunteers trichy” -என்ற அமைப்பின் சார்பாக முரளிகுமார் என்பவரிடம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீரங்கம் போலிசார், அக்குழந்தையை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

இன்று (26.09.2020) காலை நிலவரப்படி அக்குழந்தை திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவப் பிரிவில் நலமுடன் இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவத்தைப் பார்க்கும்போது “தந்தை தவறு செய்தார்; அதற்கு தாயும் இடம்கொடுத்தாள்; என்ன தவறு செய்தேன்; அது தான் எனக்கும் புரியவில்லை; வந்து பிறந்து விட்டேன்; ஆனால் வாழத் தெரியவில்லை” என்ற கவிதை வரிகளைதான், அந்த குழந்தை தன் அழுகையின் மூலம் உச்சரிப்பதாக என் ஆழ்மனது எனக்கு உணர்த்துகிறது. இதுபோன்ற துயரம் இனி எங்கேயும் நிகழக் கூடாது என்பதுதான் இச்செய்தியின் நோக்கம்.

இவ்விசியத்தில் அந்த ஆட்டோ டிரைவரின் அர்பணிப்பும், துணிச்சலும் மிகவும் பாராட்டிற்குரியது. அதே போல் ஸ்ரீரங்கம் சட்டம் -ஒழுங்கு போலீசாரின் பணி மகத்தானது. ஆம், ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலிசாரின் வருகைக்காகவும், பதிலுக்காகவும் காத்திருக்காமல், காலதாமதம் செய்யாமல், உடனடியாக களத்தில் இறங்கி அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தது உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

இந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் யார்? என்ன காரணத்திற்காக அந்த குழந்தையை வெள்ளைத்துணியில் கட்டி இங்கு வீசியெறிந்தார்கள்? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் பல கோணத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply