ஏற்காடு கராரா எஸ்டேட்டில் மூன்று பேர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பிச் செல்ல முயன்ற வடமாநில இளைஞர் கைது!

புத்ராம்

சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த, ஜார்கன்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (வயது 41) மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (வயது 36) ஆகியோர் செப்டம்பர் 29 அன்று அவர்கள் குடியிருந்த வீட்டிற்குள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இந்த கொலை வழக்கில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சிரே கெர்கெட்டா (வயது 25), சுக்ராம் (வயது 21), ராம்சநாக் (வயது 39) ஆகிய மூவரையும், ஏற்காடு போலீசார் அக்டோபர் 1 – ந்தேதி கைது செய்து ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

முச்சிரே கெர்கெட்டா.

சுக்ராம்.

ராம்சநாக்.

மேலும், இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள புத்ராம் மற்றும் ஹைரா போத்ரே ஆகியோரை ஏற்காடு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே கணவன், மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரே என்ற இளைஞர், அதே எஸ்டேட்டில் கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் ஏற்காடு காவல்துறையினரால் நேற்று முன் தினம் சடலமாக மீட்கப்பட்டார். அருகில் கத்தி ஒன்றும் கிடந்தது.

புத்ராம்.

இந்நிலையில், மூன்று பேர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புத்ராம், கடந்த 4 நாட்களாக எஸ்டேட் மற்றும் அதையொட்டிய வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும். வெளியூர் செல்ல அவரது தம்பி முச்ரேவின் மனைவி ரம்யாவிடம் பணம் மற்றும் துணி வாங்க வந்தபோது, நேற்று காலை ஏற்காடு போலீசார் அவனை கைது செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வேலை செய்து வரும் நபர்களின் பெயர் மற்றும் முகவரி விபரங்களை உரிய அடையாளங்களோடு சேகரித்து, உண்மையிலுமே வேலை நிமித்தமாகதான் இங்கு தங்கி இருக்கிறார்களா? அவர்கள் சொந்த ஊரில் அவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா?- என்ற விபரங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக மொழி வளம் தெரிந்த நபர்கள் அடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN October 5, 2020 4:54 pm

Leave a Reply