சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட மனித விண்கலம்..!- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைத்த நாசா.

தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா கடந்த மே மாதம் முதல் முறையாக சோதனை செய்தது. 2 வீரர்கள் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று ஆய்வு செய்து ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர். அதனைத் தொடர்ந்து நாசா தற்போது 4 வீரர்களை விண்வெளிக்கு இன்று அனுப்பியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள க்ரூ டிராகன் விண்வெளி ஒடத்தில் நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் இன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வர்.

தற்போது டிராகன் க்ரூ மூலம் விண்ணுக்கு செல்லும் வீரர்களில் விக்டர் க்ளோவர் என்பவர் மட்டுமே நடுத்தர வயதுக்காரர். மற்ற மூன்று வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply