வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதிதீவிர புயலாக (நிவர்-NIVAR) வலுப்பெற்று இன்று (25.11.2020) மாலை முதல் நாளை (26.11.2020) அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் சமயங்களில், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 கி.மீ., முதல் 140 கி.மீ, வரை காற்று வீசக்கூடும். சமயங்களில் 150 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இதனால் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும், அதிகனமழையும் பெய்யும். எனவே பொது மக்களும், அரசு நிர்வாகமும் விழிப்புடன் இருப்பது நல்லது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com