மனைவியை இழந்து வாடும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் ஆறுதல்!

எஸ்.ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா 15-12-2020 அன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மனைவியை இழந்து வாடும் ஜெகத்ரட்சகனுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அனுசுயா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.ஜெகத்ரட்சகன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் சாமிக்கண்ணு மற்றும் தாய் இலட்சுமி அம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். இவர் வழுதாவூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார். இவருக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 நவம்பர் முதல் 2013 மார்ச் வரை மாநிலத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.

பாலாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அன்னை தெரேசா என்னும் நூல் உட்பட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply