சேலம் மாவட்டம், ஏற்காட்டில், பொதுமக்களுக்கு மின் வாரியத்தினர் ‘மின்சார சிக்கன விழிப்புணர்வு’ ஏற்படுத்தினர். ஏற்காடு மின் வாரிய உதவி செயற் பொறியாளர் ரவிசந்திரன் தலைமையில் மின் வாரியத்தினர், ஏற்காடு பகுதியில் உள்ள கடை வீதி, சந்தை பகுதி, பஸ் நிலையம், அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக, சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து தண்ணீர் சூடு செய்தல், மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்; தேவையில்லாத சமயங்களில் தொலைக்காட்சி, மின்விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்டவைகளை அனைத்து வைக்க வேண்டும்; சாதாரண குண்டு பல்பிற்கு பதிலாக சி.எப்.எல் மற்றும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டும்; ஏ.சி. பயன்படுத்தும் போது கதவு, ஜன்னல்களை மூட வேண்டும்; தண்ணீர் சூடான பின்னர் வாட்டர் ஹீட்டரை அனைத்து வைக்க வேண்டும். உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
மேலும், ஏற்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்கள் அனைத்திற்கும் ஒலிபெருக்கி மூலம் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சுந்தரி, மேற்பார்வை பொறியாளர் சண்முகம், மாதேஸ்வரன், சங்கர், சேகர் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
-நே.நவீன் குமார்.