டில்லி குருத்வாராவிற்கு சென்று பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோதி!-குருத்துவார் என்றால் என்ன?!-அங்கு எதற்காக செல்ல வேண்டும்?!-சுவராசியமான ஆன்மீகத் தகவல்கள்..!

இன்று (20.12.2020) காலை வரலாற்று சிறப்புமிக்க டில்லி ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவிற்கு சென்று பிரதமர் நரேந்திர மோதி பிரார்த்தனை செய்தார்.

குருத்துவார் என்றால் என்ன?!-அங்கு எதற்காக செல்ல வேண்டும்?!

குருத்துவார் என்பது சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமாகும். குருத்துவார் என்பதற்கு குருவை அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம். குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கிய மத நூலை வைத்து, சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி வழிபடுவர்.

குருத்துவாரில் லங்கர் (Langar) எனப்படும் மற்றும் உணவு விடுதியில் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்படும். பெரிய அளவிலான குருத்துவார்களில் நூலகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சமய வகுப்பறைகள் வசதிகள் உண்டு. குருத்துவார் கோயில் உச்சியில் சீக்கிய சமயக் கொடி பறக்கும். குருத்துவாரில் ஆண்களும், பெண்களும் தங்கள் தலையைக் குல்லாய் (அல்லது) துணியை மூடியவாறு செல்வது கட்டாயம்.

Gurdwara Rakab Ganj Sahib Delhi

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரில் ஒன்றான டில்லி ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில்தான் பிரதமர் நரேந்திர மோதி இன்று (20.12.2020) பிரார்த்தனை செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற குருதுவார்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர் நகரில் உள்ள பொற்கோயில் குறிப்பிடத்தக்கதாகும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply