சனீஸ்வர பகவான் இன்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு, முன்னதாக திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் “சனிப்பெயர்ச்சி விழா” இன்று (27.12.2020) அதிகாலை 3.30 மணி முதல் 5.45 மணி வரை நடைப்பெற்றது.
திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சிவனின் வடிவமான ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. சனி பெயர்ச்சி அன்று தர்ப்பாரண்யேசுவரர் கோயிலுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள்.
தற்போது உலகம் முழுவதும் “கொரோனா வைரஸ்” அச்சுறுத்தல் இருந்து வருவதால், சென்னை உயர்நீதிமன்றதினால் 23/12/2020 அன்று W.P.No.19420/2020 வழங்கபட்ட வழிமுறைகளின் படி, திருக்கோவில் இணையதளதில் பதிவு செய்து, தரிசனத்திருக்கு முன் 48 மணி நேரத்திருக்குள் செய்யபட்ட கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் ரிபோர்ட் உடன் வரும் பக்ததார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க திருநள்ளாறு – ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம்,முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை 26/12/2020 முதல் 31/01/2021 வரை தொடரும். மேலும், நளன் குளத்தில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது பக்தர்களின் பழங்கால நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com