1135137909_PressNoteNo_16G.E_toL.A.of5StatesandUT26_02.2021
அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டமன்றங்களுக்கு பொதுத் தேர்தல்கள் நடத்துவதற்கான அட்டவணையை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று (26.02.2021) மாலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபைகளுக்கான பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை விபரம்:
வேட்புமனு தாக்கல் துவக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
சட்டசபை வாக்கு பதிவு: ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை: மே 2
1135137909_PressNoteNo_16G.E_toL.A.of5StatesandUT26_02.2021
அதெல்லாம் சரிதான்; வாக்கு பதிவு நடந்த (ஏப்ரல் 6) நாளில் இருந்து 24 நாட்கள் கழித்து (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கு இத்தனை நாள் அவகாசம்?! வாக்கு சீட்டில் தேர்தல் நடத்திய காலத்தில் கூட, சுமார் 2 நாட்கள் அவகாசத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதே?!- இந்த எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரக் காலத்தில் இத்தனை நாள் கால அவகாசம் எதற்கு?! இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லையென்றால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com