கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள ராகுல் காந்தி, 5 முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக இன்று உறுதியளித்துள்ளார்.
அதன்படி அஸ்ஸாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பணமும்; 200 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குவோம்; 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்குவோம்; மேலும், அஸ்ஸாமில் நமது ஆட்சி அமைந்தவுடன் குடியுரிமை சட்டத்தை–Citizenship Amendment Act (CAA) தடைச் செய்வோம்; தேசிய அளவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை Citizenship Amendment Act (CAA) முழுமையாக தடைச் செய்ய முடியும் என்றார்.
முன்னதாக தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கேயே அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதன் பிறகு கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com