மாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப்போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள். மாட்டைக் கட்டிப்போட வேண்டுமென்றால், தும்பைத்தான் பலமாகப் பிடிக்க வேண்டுமே தவிர, அதன் வாலை அல்ல. வாலைப் பிடித்தால் என்னவாகும்? மாடு மிரண்டு ஓடிவிடும்; அதாவது, காரியம் கெட்டுவிடும்.
ஆம், ‘தும்பை விட்டு விட்டு வாலை பிடித்த கதையாகதான் இருக்கிறது கொரோனா தடுப்பு மற்றும் கட்டுபாட்டு விதிமுறைகள்.
ஓட்டுக்காக ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதரக் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பிரசாரத்தின் போதும்; அவர்கள் நடத்திய பொதுக் கூட்டத்தின் போதும்; ஆயிரக்கணக்கான; லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை முக கவசம் அணியாமலும், சமூக இடவெளியை கடைப்பிடிக்காமலும், வாகனங்களில் அழைத்துச் சென்று ஒரே இடத்தில் தேனீக்களைப் போல அடைத்து வைத்தபோது; இந்த பேரிடர் மேலாண்மை எங்கே போனது?!
இன்று ஆட்சித் தலைவராகவும்; வருவாய்த்துறை (DRO / RDO/ Tahsildar) அதிகாரிகளாகவும் இருப்பவர்கள்தானே; இரு தினங்களுக்கு முன்புவரை தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார்கள்?! இப்போதும் இருக்கிறார்கள்! அப்போது கை கட்டி; வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து விட்டு, தேர்தல் முடிந்தவுடன் இன்று கட்டுபாடுகளை விதிப்பது கேலிகூத்தாக இருக்கிறது. அரசியல்வாதிகள் என்றால் அவ்வளவு பயம் அப்படிதானே?! அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்; அப்பாவி பொது மக்களுக்கு ஒரு சட்டமா?!
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
முட்டா பசங்க சார், இவங்க……