7555_2021_38_15_27432_Order_09-Apr-2021
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு; இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை பாப்பாரப்பட்டியை சேர்ந்த போ.அபிஷ்குமார் என்பவர், இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (09.04.2021) விசாரணைக்கு வந்தது.
இதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு; உடனடியாக இந்த உள் ஒதுக்கீட்டு ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
ஜாதி என்ற பெயர் ஒன்று இருக்கும் வரை ஜாதி யை ஒழிக்க முடியாது……