ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீடு தேடி வழங்கும் திட்டம்!-ஆந்திர மாநிலத்தைப் போல; தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனது வைப்பாரா?!

ஆந்திர மாநிலத்தில் நியாய விலை கடைகளின் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தரமாகவும், அதே சமயம் எடை மற்றும் அளவு குறையாமலும், மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சரியான நேரத்தில் நேரடியாக சென்று வழங்கும் திட்டத்தை, ஆந்திர மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்வற்காக 9260 நடமாடும் வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தில் நடைப்பெற்று வந்த ஊழல் மற்றும் முறைக்கேடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் இதேபோன்றத் திட்டத்தை, தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால், பொது விநியோகத்தில் நடைப்பெற்று வரும் எடை மற்றும் அளவு குறைவு, ஊழல் மற்றும் முறைக்கேடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு தமிழ மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.

மனமிருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனது வைப்பாரா?!

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/11/56793/

Leave a Reply