ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி!-தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிமாக சிறப்பு கொரோனா சிகிச்சை மையம்!-மதுரையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிமாக சிறப்பு ‘கொரோனா’ சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஆவி பிடிப்பதற்கான கருவியும் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

-சி.கார்த்திகேயன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply