‘எவரெஸ்ட்’ சிகரத்தை எட்டி பிடித்த மத்திய ஆயுதப்படை காவலர்கள்!-‘எவரெஸ்ட்’ சிகரம் எப்படி உருவானது?!-வியக்க வைக்கும் சுவாரஸ்யமான தகவல்கள்..!

அதிகாரபூர்வமாக 8848 மீட்டர், அதாவது 29028.87அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில், மத்திய ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் எஸ்.ரதன் சிங், சோனல் சுமித் சோம்ரா, சுரேஷ் சேத்ரி ஆகியோர், இன்று (23.05.2021) காலை 8.30 மணிக்கு 8516 மீட்டர் உயரத்தை எட்டி பிடித்தனர்.

எவரெஸ்ட் சிகரம் பூமியின் இளம் சிகரங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் ‘மடிப்பு மலை’ என்று கூறுகிறோம். இந்த மடிப்பு மலைகளில் எவரெஸ்ட்டும் ஒன்று.

வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும்; யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது.

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாக ‘தெதைஸ்’ பெருங்கடலை மூடிவிட்டது, பாலியோ-தெதைஸ் பெருங்கடலில் தான் இப்போதைய இந்தியா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடல் போன்ற நிலப்பகுதிகள் இருந்தன.

இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.

இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது. அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு, ஆசியத் தகடுகள் நுழைவதால்தான் இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN May 25, 2021 7:16 pm

Leave a Reply