டிவிட்டர் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவதில் இந்தியா பல நூற்றாண்டுகளாக பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் சுதந்திரமான பேச்சை காப்பது, டிவிட்டர் போன்ற தனியார் மற்றும் லாப நோக்குடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மட்டுமான, தனிச்சிறப்புரிமை அல்ல.
ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மற்றும் அதன் வலுவான அமைப்புகளின் உறுதிப்பாடு அர்ப்பணிப்பு கொண்டவையாகும்.
டிவிட்டர் நிறுவனத்தின் அறிக்கை, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, தனது விதிமுறைகளை கூறும் முயற்சி. டிவிட்டர் தனது செயல்பாடுகள் மற்றும் வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது. மேலும், இந்தியாவில் எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து பாதுகாப்பை கோருவதன் அடிப்படையில், இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற டிவிட்டர் மறுக்கிறது.
மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், டிவிட்டர் நிறுவனம் மிகவும் உறுதிப்பாட்டுடன் இருந்தால், அதுபோன்ற செயல்முறையை ஏன் இந்தியாவின் ஏன் ஏற்படுத்தவில்லை? ‘‘எங்களுக்கு அதிகாரம் இல்லை, அவர்களும், இந்தியாவில் உள்ள மக்களுக்கும் அமெரிக்காவில் உள்ள டிவிட்டர் தலைமையகத்துக்கு அனைத்து பிரச்சனைகளையும் தெரிவிக்க வேண்டும்’’ என இந்தியாவில் உள்ள டிவிட்டர் பிரதிநிதிகள் தொடர்ந்து கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய பயனர் தளத்துக்கு, டிவிட்டரின் அர்ப்பணிப்பு, வெற்றுத்தனமாக மட்டும் அல்லாமல், முற்றிலும் சுயசேவையாக இருக்கிறது.
டிவிட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளும் இந்தியாவில் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என இந்திய அரசு விரும்புகிறது.
டிவிட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி. இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது.
நடைபெறும் விசாரணை தொடர்பாக தில்லி போலீசும், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது டிவிட்டர் எழுப்பிய முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கிறது.
–எஸ்.திவ்யா.