மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து விவகாரம்!-பிரதமர் நரேந்திர மோதியிடம் சரணடைந்த மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே!-முழு விபரம்.

Hon’ble Mr. Justice Ashok Bhushan.

Hon’ble Mr. Justice S. Abdul Nazeer.

Hon’ble Mr. Justice L. Nageswara Rao.

Hon’ble Mr. Justice J. Hemant Gupta.

Hon’ble Mr. Justice S.Ravindra Bhat.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது; அதனால், இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது என, நீதிபதிகள் அசோக் பூஷன், எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர், ஹேமண்ட் குப்தா, எஸ்.ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மே 5, 2021 அன்று தீர்ப்பளித்தது.

மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

தலையில் சம்மட்டியால் அடித்தார்போல இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இத்தீர்ப்பைக் கண்டு உண்மையிலுமே நிலைகுலைந்துப் போனார்.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த 568 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

23618_2019_35_1501_27992_Judgement_05-May-2021

இதற்கிடையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான சரியான காரணங்களை கூறி, உச்ச நீதிமன்றத்தை ஏற்க வைப்பதில், மஹாராஷ்டிரா மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சியையும் கூட்டி ஆலோசிப்பதுடன், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கூக்குரலிட்டனர்.

இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை மஹாராஷ்டிராவில் கோரத்தாண்டவம் ஆடியதால், பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போயிருந்த மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தனது டெல்லி பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட போராட்டம் தொடரும் என அறிவித்துவிட்டு, கடந்த ஒரு மாத காலமாக ‘இழவு காத்த கிளிப் போல’ காத்திருந்தார்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை இன்று (08.06.2021) நேரில் சந்தித்தார். அவருடன் மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, மராத்தா இட ஒதுக்கீடு ரத்து, ஜிஎஸ்டி மற்றும் புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக, மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

ஷா பானு ஜீவனாம்ச வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செல்லாது என்று அறிவித்ததைப் போலவும், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைப் போலவும், தற்போது மராத்தாவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதியிடம், மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று கெஞ்சி, கூத்தாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மராத்தாவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், உத்தவ் தாக்கரே வகையாறாவின் அரசியல் வாழ்க்கை மஹாராஷ்டிரா மாநிலத்தில் இத்துடன் நிரந்தரமாக அஸ்தமனமாகிவிடும்.

ஒருவேளை, மராத்தாவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டால், மஹாராஷ்டிரா மாநில ஆட்சி நிர்வாகத்தில் இருந்து சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்டு; மீண்டும் சிவ சேனா – பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பங்கு போட்டுகொள்ளும் அவலம் அங்கு அரங்கேறும்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி; எதிர்கட்சி ஆதரவு நிலைப்பாடு எண்ணிக்கை விபரம்.

தம்மை ஏற்கனவே நம்ப வைத்து துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடிக் கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தலைமை நினைத்தால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, தற்போது சிவசேனா கட்சியோடு அதிருப்தியில் ஆட்சியில் பங்கெடுத்து வரும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, அங்கிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தால், அங்கு அதிருப்தியில் இருக்கும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பார்கள். தற்போது மைனாரட்டி அரசின் முதலமைச்சராக இருக்கும் உத்தவ் தாக்கரே வகையாறாவை நிச்சயம் வீட்டிற்கு அனுப்பி விடலாம்.

யார் கண்டது?! அரசியலில் எது; எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஏனென்றால், ‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை’ என்பதுதான் இன்றுவரை எழுதப்படாதச் சட்டமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

எது எப்படியோ; மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலையெழுத்து, தற்போது பிரதமர் நரேந்திர மோதி கையில் தான் இருக்கிறது.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply