அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆளுநரின் கடிதம்!-மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டு..!

Jagdeep Dhankhar., Governor of West Bengal.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்களால் மனித உரிமை மீறல், பெண்களின் கண்ணியம், கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, உடமைகள் மற்றும் சொத்துக்களை அழித்தல், அரசியல் எதிரிகள் மீது தொடர்ந்து துன்பம் விளைவித்தல் போன்ற, சுதந்திரத்திற்கு பிறகான மோசமான சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்காமல், முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து மௌனம் காத்துவருவதாக, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று (15.06.2021) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தின் உண்மை நகலை, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இதற்கு மேற்குவங்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொது வெளியில் ஒரு தலைபட்சமாக வெளியிடப்பட்ட ஆளுநரின் கடிதம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அதில் உள்ள கருத்துகள் உண்மைகளுடன் ஒத்துப்போகாத உள்ளடக்கங்களுடன் உள்ளதாகவும், மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசையும், முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்து எழுதிய கடிதத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரின் நடவடிக்கை தவறு என்றால்; அதற்கு பதில் அளிக்கும் விதமாக மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்து மட்டும் எப்படி நியாயமாகும்?!இது குழாயடி சண்டையாகதான் இருக்கிறது.

ஆளுநரும் – முதலமைச்சரும் நேருக்கு நேர் சந்தித்து; கலந்து ஆலோசித்து, மேற்காணும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதை விட்டு விட்டு; இப்படி சமூக ஊடகங்களில் சண்டையிட்டு சந்தி சிரித்து வருவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருதரப்பும் செய்யும் துரோகமாகும்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply