அழுக்கைப் போக்க சோப்பு!-ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு!-சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ காவல் கண்காணிப்பாளர்!

Brajesh Kumar Deputy superintendent of Police, CBI, ACB, Bangalore.

பிரஜேஷ் குமார் என்பவர் தற்போது பெங்களூரில் மத்தியப் புலனாய்வுத் துறையில் (Central Bureau of Investigation-CBI) துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. முடித்த அவர், 30.10.2008 அன்று மத்தியப் புலனாய்வுத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பிறகு 21.01.2013 அன்று இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு அவர் வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வின் மூலம் 05.04.2017 அன்று பெங்களூரு BS&FB –யில் பணியில் சேர்ந்தார். ஜூன் 2020 முதல் பெங்களூரில் உள்ள சிபிஐ, ஏசிபி நிறுவனத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

பிரஜேஷ் குமாருக்கு ஸ்வீட்டி சிங் என்ற மனைவியும்; அவர்களுக்கு பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தந்தை ஷியோ யோகி சிங்குடன்பிரஜேஷ் குமார்.(File Photo)

பிரஜேஷ் குமாரியின் தந்தை ஷியோ யோகி சிங்; அவர் 2003 ஆம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உதவி பதிவாளராக ஓய்வு பெற்றார். தற்போது 78 வயதாகும் அவர் மாதந்தோறும் ரூ.65000 ஓய்வூதியம் பெற்று வருகிறார். பிரஜேஷ் குமாரியின் தாய் லலிதா மற்றும் பிரஜேஷ் குமாரியின் தந்தை யோகி சிங் ஆகிய இருவரும் பிரஜேஷ் குமாருடன் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரஜேஷ் குமார் தனது வருமானத்திற்கு அதிகமாக அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சட்ட விரோதமாக பெரும் செல்வத்தை குவித்துள்ளார்.

Prestige Royale Gardens in Bangalore.

Prestige Royale Gardens, Avalahalli, Yelahanka – Doddaballapur Road, Bangalore. (File Photos)

கடந்த 2020-ல் பெங்களூருவில் உள்ள பிரஸ்டீஜ் ராயல் கார்டன் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இரண்டு வீடுகளை பிரஜேஷ் குமார் வாங்கியது குறித்து மத்தியப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது அவர்களது வருமானத்தை விட 302 சதவீதம் அதிக சொத்தாகும்.

இது குறித்து பிரஜேஷ்குமாரிடம் சிபிஐ விளக்கம் கேட்து. அதற்கு பிரஜேஷ் குமார் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளரான பிரஜேஷ் குமார் மீது, சிபிஐ காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் IPS வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் அவரது பெற்றோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

8d8aaa22-8877-456a-9877-b849be7b572dFIRRC2182021A0003

இதையெல்லாம் பார்க்கும்போது, ”அழுக்கைப் போக்க சோப்பு!-ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு”- என்ற கிராமத்து பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply