முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை, கண்காணிப்பு குழுவினருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

Minister of Commerce & Industry, Railways and Consumer Affairs, Food & Public Distribution, Shri Piyush Goyal chaired a meeting for the review of 20 large-scale infrastructure projects with issues enlisted for resolution, with the Project Monitoring Group on the 29th of June, 2021. Shri Som Prakash, Minister of State for Commerce and Industry, Secretary, Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Chief Secretaries of Governments of Bihar, Haryana and Tamil Nadu, and Additional Chief Secretary, Industries of Government of Maharashtra participated through Video Conference. Senior officials of key Central Ministries including Railways, Petroleum and Natural Gas, Road Transport and Highways, Environment, Forest and Climate Change were also present to discuss issues affecting the progress of work and timely completion of these critical projects.

The Minister of Commerce and Industry reviewed 59 issues in 20 critical infrastructure projects with anticipated investment value of nearly ₹2.7 lakh crores. This includes 11 projects previously reviewed under PRAGATI by the Hon’ble Prime Minister.

Among the projects reviewed, a few notable names are as follows:

  • Dedicated Freight Corridors along eastern and western routes will augment capacity of rail freight transportation and establish industrial zones at junction points
  • Amritsar Kolkata Industrial Corridor traverses through 7 States and facilitate development of industrial manufacturing in the influence region of Eastern Dedicated Freight Corridor

Shri Goyal issued directions and timelines to ensure expeditious resolution of pending issues for timely commissioning of projects. The Minister also emphasized the importance of regular multi-level monitoring of infrastructure projects that are critical to the economic growth and employment generation in the country.

xxxxxxxxxxx

நாட்டில் மேற்கொள்ளப்படும் 20 மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, திட்ட கண்காணிப்பு குழுவுடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த மாதம் 29ம் தேதி ஆய்வு செய்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ், பீகார், ஹரியானா, தமிழ்நாடு அரசுகளின் தலைமை செயலாளர்கள் உட்பட மத்திய, மாநில அதிகாரிகள் பலர் கலந்துகா கொண்டனர். இதில் முக்கிய உள் கட்டமைப்பு திட்ட பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்சினைகள், மற்றும் குறித்த நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், மேற்கொள்ளப்படும் 20 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள 59 பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இவற்றில் 11 திட்டங்கள், பிரகதி திட்டத்தின் கீழ் பிரதமரால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவை.

கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடங்களை அமைப்பது, ரயில் நிலையங்கள் அருகே பொருளாதார மண்டலங்களை அமைப்பது, 7 மாநிலங்கள் வழியாக செல்லும் அமிர்தசரஸ் – கொல்கத்தா தொழில் வழித்தடம், கிழக்கு பகுதியில் பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடம் அமைப்பதன் மூலம் தொழில் உற்பத்தியை மேம்படுத்தும் வசதிகள் உட்பட பல திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

இத்திட்டங்களை சரியான நேரத்தில் தொடங்குவதற்கு, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் மிக முக்கியமான இந்த உள்கட்டமைப்பு திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

திவாஹர்.

Leave a Reply