தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்!- கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

கர்நாடக அரசு, மேகதாது அணைக் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் எனவும், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் – கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாக்கு,எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்

இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்புகளை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/07/04/58921/

Leave a Reply