‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும்!-பிரதமர் நரேந்திர மோதி உரை.

file photo

The Prime Minister, Shri Narendra Modi today addressed the CoWin Global Conclave as India offered CoWIN platform as a digital public good to the world to combat COVID19.

The Prime Minister began with conveying his condolences for all the lives lost to the pandemic, in all the countries. The Prime Minister remarked that there is no parallel to such a pandemic in hundred years and no nation, however powerful, can solve a challenge like this in isolation. “The biggest lesson from the COVID-19 pandemic is that for humanity and the human cause, we have to work together and move ahead together. We have to learn from each other and guide each other about our best practices” said the Prime Minister.

Underlining India’s Commitment for sharing experiences, expertise and resources with the global community, the Prime Minister also expressed India’s eagerness to learn from global practices. Emphasizing the importance of technology in the fight against pandemic, Shri Modi said that software is one area in which there are no resource constraints. That’s why India made its Covid tracking and tracing App open source as soon as it was technically feasible. He pointed out that with nearly 200 million users, the ‘Aarogya Setu’ app is a readily available package for developers. Having been used in India, the Prime Minister told the global audience, you can be sure that it has been tested in the real world for speed and scale.

The Prime Minister said that given the importance of vaccination, India decided to adopt 

a completely digital approach while planning its vaccination strategy. This helps people in proving that they have been vaccinated, expediting the normalcy in the post pandemic globalized world. A safe, secure and trustworthy proof helps people to establish when, where and by whom they have been vaccinated. Digital approach also helps in tracking the usage of vaccination and minimizes the wastage.

In line with India’s philosophy of considering the whole world as one family, the Prime Minister said, Covid vaccination platform CoWin is being prepared to be made open source. Soon, it will be available to any and all countries.

Shri Modi stressed that today’s Conclave is the first step to introduce this platform to the global audience. The Prime Minister informed that through CoWin, India has administered 350 million doses of Covid vaccines, including 9 million people in one day, few days ago. Furthermore, vaccinated people do not need to carry around fragile pieces of paper to prove anything. It is all available in digital format. The Prime Minister also highlighted the customizability to the software as per the local requirements of the interested countries. The Prime Minister concluded with the hope that guided by the approach of ‘One Earth, One Health’, humanity will certainly overcome this pandemic.

xxxxxxxx

கொரோனாவை எதிர்த்து போராட, உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக கோவின் தளத்தை இந்தியா வழங்கியதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இன்று உரையாற்றினார்.

அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களுக்கு அவரது இரங்கலை தெரிவித்து தனது உரையை பிரதமர் தொடங்கினார். 100 ஆண்டுகளில் இது போன்ற பெருந்தொற்று ஏற்படவில்லை என்றும், எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இது போன்ற சவாலை தனியாக தீர்க்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மனித இனம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம், நாம் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என்பதுதான். சிறந்த முறைகளை நாம் ஒருவருக்கொருவர் கற்று வழிகாட்ட வேண்டும் என பிரதமர் கூறினார்.

நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக நடைமுறைகளை கற்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது எனவும் கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மென்பொருள் என்பது வளங்கள் தடைகள் இல்லாத ஒரு பகுதி என்றார். அதனால்தான் இந்தியா, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானவுடன், தனது கோவிட் கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு செயலியை அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதமாக்கியது. 200 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொகுப்பாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதால், இது நிஜ உலகில் வேகம் மற்றும் அதிக அளவிற்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என உலக பார்வையாளர்களிடம் பிரதமர் கூறினார்.

தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முடிவு செய்ததாகவும் பிரதமர் கூறினார். இது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க உதவுகிறது, தொற்றுக்கு பிந்தைய உலகில் இயல்புநிலையை விரைவுப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம், எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிருபிக்க மக்களுக்குஉதவுகிறது. தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்தை கருத்தில் கொண்டு, கோவின் தளம் பிறநாடுகளும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படுகிறது. விரைவில், இது எந்த உலக நாடுகளுக்கும் கிடைக்கும்.

இந்த கோவின் தளத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்த இன்றைய மாநாடு முதல் நடவடிக்கை என திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறினார். கோவின் இணையதளம் மூலம், இந்தியா 350 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை போட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் 9 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதை நிருபிக்க எந்த துண்டு சீட்டையும் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அது டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கிறது.

விருப்பமுள்ள நாடுகளின் உள்நாட்டு தேவைக்கேற்ப இந்த மென்பொருளின் தனிப் பயனாக்கத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply