மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும்!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space Dr Jitendra Singh today said that a Common Eligibility Test (CET) for job aspirants will be conducted across the country from early 2022. This unique initiative undertaken with the personal intervention of Prime Minister Narendra Modi to screen and shortlist candidates for recruitment to Central Government jobs was scheduled to take off with the first such test before the end of this year, but is likely to get delayed on account of COVID pandemic, he said.

Speaking after the launch of e-Book Civil List-2021 of IAS officers, Dr Jitendra Singh said, the Common Entrance Test is a path-breaking reform carried out by Department of Personnel & Training (DoPT) to bring about “Ease of Recruitment” for young job aspirants and it will prove to be a major boon for youth, especially those living in far-flung and remote areas. This landmark reform is also a reflection of Prime Minister Narendra Modi’s deep and sensitive concern for the youths and his keenness to provide level playing field and equal opportunity to youth across the country, he added.

The Minister further informed that the National Recruitment Agency (NRA) for conducting Common Eligibility Test has been constituted with the approval of the Union Cabinet. NRA will conduct CET to screen/shortlist candidates for jobs in Government sector for which recruitment is presently carried out through the Staff Selection Commission (SSC), Railway Recruitment Boards (RRBs) and Institute of Banking Personnel Selection (IBPS).

Dr.Jitendra Singh said that the NRA will be a multi-agency body which will conduct the common test to screen and shortlist candidates for Group-‘B’ and ‘C’ (non-technical) posts. The most significant feature of this reform is that every district in the country will have at least one Examination Centre which would greatly enhance access to the candidates living in far-flung areas, he added.

Dr.Jitendra Singh said that the historic reform will provide a level playing field to all the candidates, regardless of his or her background or socio-economic status. There will also be a huge benefit to women and Divyang candidates and for those who find it financially unaffordable to appear for multiple tests by travelling to multiple Centres.

DrJitendra Singh said that the push given to DoPT in the last seven years by the Narendra Modi Government resulted in a number of innovations and reforms for the common public good. Referring to a series of out of box decisions since May 2014, he said that the decision to do away with the time old practice of getting documents attested by a gazetted officer and replacing the same with self-attestation, three-month Central Government stint as Assistant Secretaries for IAS officers in the beginning of their career are far reaching in nature.

Speaking about the e-Book IAS Civil List 2021, Dr Jitendra Singh said, the dynamic list will help in selecting the right officer for the right assignment based on available profile and is a vital source of information on the officers manning various posts for the general public. He said, the e-book IAS Civil list is an effort by the Department to contribute towards Digital India initiative of the Government of India. This effort will also ensure economic utilization of resources by reducing the burden on government exchequer, he added.

This is the 66th edition of Civil List and first edition of e-book in pdf with unique search facilities and hyperlinking of contents for ease of access of information at a click of button. By introducing publication of e-Book IAS Civil list 2021, DoPT has done away with the printing of voluminous IAS Civil list. The IAS Civil List contains vital information in respect of officers’ batch, cadre, present posting, pay scale, qualification and date of superannuation along with their overall cadre-wise strength, number of IAS officers retiring in next five years including number of IAS officers appointed on the basis of Civil Services Examination from 1969 onwards. The list also contains photographs of IAS officers.The e-book IAS Civil List, 2021 is also available on the website of the Department at https://dopt.gov.in.

xxxxxx

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக இந்த வருட இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குடிமைப் பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக பொதுத் தகுதித் தேர்வு அமைந்திருப்பதாக கூறினார். இளைஞர்கள் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரது முனைப்பின் பிரதிபலிப்பாகவும் இந்த மிகப் பெரிய சீர்திருத்தம் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு பதிலாக பொது தகுதி தேர்வை தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும்.

பிரிவு பி மற்றும் சி பணியிடங்களுக்கு (தொழில் நுட்பம் சாராத) தகுதியானவர்களை தேசிய ஆட்சேர்ப்பு முகமைப் பொதுத் தகுதி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது இருக்கும் என்பதும் இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்கான அணுகல் பெரிய அளவில் மேம்படும் என்பதும் இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கிய அம்சம் என்று அவர் மேலும் கூறினார்.

எம்.பிரபாகரன்.

Leave a Reply