Union Minister of Youth Affairs & Sports Shri Anurag Thakur launched the official cheer song for the Tokyo-bound Indian contingent in a virtual event on Wednesday. The event was also attended by Minister of State for Youth Affairs and Sports Shri Nisith Pramanik, Indian Olympic Association President Shri Narinder Batra, IOA Secretary-General Shri Rajeev Mehta, Director General, Sports Authority of India Shri Sandip Pradhan and CEO, Target Olympic Podium Scheme, Commander Rajgopalan.The song, titled ‘Hindustani Way’, is performed by young pop singer Ananya Birla and composed by veteran Indian music composer AR Rahman.
Shri Anurag Thakur congratulated the artists for coming together during tough times and executing the project with full passion. “I thank AR Rahman and Ananya Birla for taking this initiative. They did this song with a lot of passion and it also takes a lot of compassion to execute this during the Covid 19 pandemic, when it was not easy for them to collaborate. You took all the interest and initiative to come out with this song for Team India and cheer for India. I request everyone to share this song as much as you can,” mentioned Shri Thakur.
Shri Nisith Pramanik mentioned that the song is yet another encouraging step to amplify Prime Minister Shri Narendra Modi’s clarion call of cheering in every possible way for the Tokyo-bound athletes. “Hon’ble Prime Minister Shri Narendra Modi initiated the #Cheer4India campaign for our Tokyo-bound athletes. The country came forward wholeheartedly to show support and solidarity to this clarion call. I thank the maestro AR Rahman and Youth icon Ananya Birla to come up with this amazing production,” said Shri Pramanik.
xxxxxxx
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் நிசித் பிரமானிக், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரீந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி கமாண்டர் ராஜகோபாலன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
‘இந்துஸ்தானி வழி’ என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலுக்கு புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இளம் பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார். கடினமான நேரங்களில் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கலைஞர்களை திரு அனுராக் தாக்கூர் பாராட்டினார்.
“ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லா ஆகியோருக்கு இந்த முயற்சிக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான இந்த கொரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் இந்த பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இந்த பாடலை எந்த அளவு முடியுமோ அந்தளவு பகிருமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு தாக்கூர் கூறினார்.
டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அறைகூவலை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சியாக இந்த பாடல் அமைந்துள்ளதாக திரு நிசித் பிரமானிக் கூறினார்.
“டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க #Cheer4India என்ற பிரச்சாரத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி தொடங்கினார். இதற்கு ஒட்டுமொத்த நாடும் முழு மனதுடன் ஆதரவளித்து வருகிறது. இந்த பிரமாதமான பாடலுக்காக இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கும், இளம் கலைஞர் அனன்யா பிர்லாவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்