Pondicherry University recently released its prospectus titled “Towards Excellence” for the Academic Year 2021-2022 containing the programmes offered, eligibility criteria and other details for information of prospective applicants from throughout the world. Professor Gurmeet Singh, Vice Chancellor, PU was the Chief Guest and released the first copy of the prospectus which was received by Shri Rajkumar. S, the Nodal Officer for Andaman Nicobar Islands Centre.
On this ceremony after releasing prospectus, Professor Gurmeet Singh, Vice Chancellor said it is gratifying that the Pondicherry University continues to be one of the leading Universities in the World in the rankings particularly on Research activities. PU also ranked among the top 1000 Universities in the QS Word NIRF Central University.
Various world class researches are going on in this University. It also gives immense pleasure to record on this colourful event that the Faculty members and Researchers are constantly involved in this.
On behalf of Pondicherry University, Andaman and Nicobar Islands Study Centre, two new Courses are introduced from this academic year. Considering the welfare of Tribal students, living in the remote areas, PG Courses like MBA in Management and PG Diploma in Bio Diversity on Animal Taxonomy (sponsored by Zoological Survey of India) are also newly introduced by the University Administration. Apart from this, a new MBA Course is also introduced in the University Karaikal Centre in order to expand and cater Management courses further to the rural students.
This is stated in a press release issued by Shri K. Mahesh, Assistant Registrar, Public Relations Wing, Pondicherry University.
xxxxxxxxxx
புதுவைப் பல்கலைக்கழக ஆளுகைக்குக் கீழ் வரும் அந்தமான் நிகோபார் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கிவரும் பல்கலைக்கழக மையங்கள் சார்பாக இந்த கல்வியாண்டு முதல் எம் பி ஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் 2021 மற்றும் 2022 கல்வி ஆண்டிற்கான முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்த மாணவர்களுக்கான விவரக்குறிப்பேடு அறிமுக விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் கலந்து கொண்டு வெளியிட்டார். முதல் பிரதியை அந்தமான் நிகோபார் தீவு பல்கலைக்கழக மையத்தின் பொறுப்பு அதிகாரி திரு ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய துணைவேந்தர் குர்மீத் சிங், உலகளவிலான தர வரிசைப் பட்டியலில் முன்னணியிலுள்ள 1000 பல்கலைக்கழகங்களில் சிறந்த உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனமாகப் புதுவைப் பல்கலைக்கழகம் இருந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, உலகத்தரத்திலான உயிர்தொழில் நுட்பம், வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் பன்னாட்டு அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன. இதில் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உழைப்பால் புதுவைப் பல்கலைக்கழகம் உலகளவில் ஆய்வுத்துறையில் எதிர்காலத்தில் முன்னேறி இந்தியாவிற்குப் பெருமைச் சேர்க்கும்.
பல்கலைக்கழகப் படிப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக, இந்த கல்வியாண்டு முதல் அந்தமான் நிகோபார் பல்கலைக்கழக மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை மற்றும் பல்லுயிர் பிராணிகள் குறித்த பட்டயப் படிப்பும் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு காரைக்கால் பல்கலைக்கழக கல்வி மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் திறன்களையும், அறிவாற்றலையும், வேலைவாய்ப்புகளையும், பன்னாட்டு உறவுகளையும் மேம்படுத்துகின்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக நவீன பாடப்பிரிவுகளில் சேர்ந்து மாணவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் கே மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா.