தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோரை இன்று (15.07.2021) நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; கொரோனா பாதிப்புகளை சரி செய்ய கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்பதை முக்கிய அம்சமாக அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.