செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியில் பொது சாலைகளை மூடுவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்யுமாறு மத்திய பாதுகாப்பு இணை அமைச்சருக்கு, குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்.

The Vice President, Shri M. Venkaiah Naidu today advised the Union Minister of State for Defence, Shri Ajay Bhatt to examine the issue of closure of public roads in Secunderabad Cantonment area as it was causing difficulty to thousands of people living in surrounding colonies.

Shri Naidu referred to the issue when the newly-appointed minister called on him at Upa- Rashtrapati Nivas today. He suggested to the minister to look into the closure of public roads in detail and take steps to mitigate the hardship faced by the people.

In this context, Shri Naidu also mentioned about a recent letter written by the Telangana government to the Defence Minister, Shri Rajnath Singh on the issue.

The minister assured the Vice President to examine the matter and address the concerns of the people.

செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியைச் சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நலனிற்காக அங்குள்ள பொது சாலைகளை மூடுவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்யுமாறு பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட்டிற்கு குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு இன்று அறிவுரை வழங்கியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணையமைச்சர், குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று அவரை சந்தித்தபோது இது தொடர்பாக எம் வெங்கையா நாயுடு பேசினார்.

செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளை குறைப்பதற்காக, சாலைகள் மூடப்படும் பிரச்சினையை விரிவாக ஆராயுமாறு யோசனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தெலங்கானா அரசு சார்பாக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள கடிதம் பற்றியும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசு துணைத் தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply