Union Minister for Road Transport and Highways, Shri Nitin Gadkari has said that National Highways Construction has seen sharp rise during the Covid restriction period. In a tweet he said in 2020-21 Highway construction has paced to 36.5 KM/day the highest ever construction speed of National Highways.
The Minister said India has also created world record by constructing 2.5 km 4 lane concrete road in just 24 hours and 26 km single lane Bitumen road in just 21 hours.
He said special efforts have been made to sustain this speed of construction. which includes support to contractors, relaxation in contract provisions, direct payment to subcontractors and food and medical facilities to on-site workers.
To ensure quality control in these projects, Shri Gadkari said construction is being carried out as per highest IRC standards and MoRTH Specifications. He said A quality control zone has been setup to update policy guidelines as well as examine and issue directions for system improvement on Quality.
xxxxxxxx
கொவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில், 2020-21ம் ஆண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிக அதிகமான வேகம் என குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நான்கு வழி கான்கிரீட் சாலை அமைத்தும், 21 மணி நேரத்தில் 26 கி.மீ தூரத்துக்கு ஒற்றை வழி தார் சாலை அமைத்தும், இந்தியா உலக சாதனை படைத்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த கட்டுமான வேகத்தை தக்க வைக்க, சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இதில் ஒப்பந்தகாரர்களுக்குத் தேவையான உதவி, விதிமுறையில் தளர்வு, துணை ஒப்பந்தகாரர்களுக்கு நேரடி பண விநியோகம், சாலை பணியாளர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டங்களில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய சாலை கட்டுமானங்கள், இந்திய சாலைகள் அமைப்பு (IRC) தரக்கட்டுப்பாடுடனும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் விவரக் குறிப்புகளுடனும், மேற்கொள்ளப்படுகின்றன என நிதின் கட்கரி கூறினார்.
தர மேம்பாட்டு முறைக்கு, கொள்கை வழிகாட்டுதல், பரிசோதனை மற்றும் உத்தரவுகளை அவ்வப்போது தெரிவிக்க தரக்கட்டுப்பாடு மண்டலம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
–திவாஹர்.