To meet higher demand of energy in summer months and to ensure that power plants operate with maximum efficiency, the following measures have been taken by the Government:
(i) All planned shutdowns of units (Thermal and Hydro) have been rescheduled to lean demand period.
(ii) There shall be periodic review of forced outage by Central Electricity Authority and Power System Operation Corporation.
(iii) There shall be adequate capacity on bar and to achieve the same even gas based generation shall be synchronized during the period of high demand.
(iv) Regular coordination interactions will be held with Central Generating Companies, State Generating Companies, Independent Power Producers, coal companies, Railways and Ministry of Coal.
To improve efficiency of Thermal Power Plants, Perform, Achieve and Trade (PAT) scheme, which is designed to reduce Specific Energy Consumption, is being implemented.
As per the Electricity Act 2003, the reasonability of cost of energy is ensured by the respective Appropriate Commissions. Cost of energy and electricity rates for consumers are different in different States as determined by the respective State Commissions depending upon the various factors like power purchase cost, Aggregate Transmission and Commercial (AT&C) loss, operation and maintenance (O&M) expense, consumer mix etc., which varies from State to State.
The Government is promoting to deepen the power markets with a view to increase efficiency in procurement of energy. Tariff based bidding has been promoted to ensure most competitive rate of bulk power and transmission services. Also introducing flexibility in use of coal in power plants and merit order despatch at national level has helped in controlling cost of generation.
This information was given by Union Minister for Power and New and Renewable Energy , Shri R.K. Singh in a written reply in Rajya Sabha Today.
xxxxxxx
கோடையில் அதிகரித்த மின்சார தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி மையங்கள், அதிக திறனுடன் செயல்படுவதை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கோடையில் அதிகரித்த மின்சார தேவையை நிறைவேற்றுவதற்கு, மின் உற்பத்தி மையங்கள் அதிகபட்ச திறனுடன் செயல்படுவதை உறுதி செய்ய கீழ்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
(1) அனல் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகள் எல்லாம், தேவை குறைவான நேரத்துக்கு மாற்றியமைக்கப்பட்டன.
(2) கட்டாய மின் நிறுத்தம் குறித்து மத்திய மின்சார ஆணையம் மற்றும் மின்சார கருவிகள் இயக்கம் கார்பரேஷன் ஆகியவை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டன.
(3) மின்சார தேவை அதிகமாக இருந்தபோது, கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி உட்பட அனைத்து வகையிலும், போதிய மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
(4) மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றுடன் சீரான ஒருங்கிணைந்த கலந்துரையாடல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அனல் மின்நிலையங்களின் திறனை மேம்படுத்த, குறிப்பிட்ட எரிசக்தி நுகர்வை குறைக்க செயல்பாடு, சாதனை மற்றும் வர்த்தகம்((PAT) திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மின்சார சட்டம் 2003-ன்படி எரிசக்தியின் நியாயமான விலை, அந்தந்த ஆணையத்தால் உறுதி செய்யப்படுகிறது. நுகர்வோருக்கான எரிசக்தி விலை மற்றும் கட்டணம், கொள்முதல் விலை, பகிர்வு இழப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
எரிசக்தி கொள்முதலில் திறனை அதிகரிக்க, மின்சார சந்தைகளை வலுப்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. மின் விநியோக சேவைகளில் அதிகளவிலான போட்டிக் கட்டணத்தை உறுதி செய்ய கட்டண அடிப்படையிலான ஏல முறை அதிகரிக்கப்பட்டது. மின் உற்பத்தி மையங்களில் நிலக்கரி பயன்பாட்டில் தளர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது மற்றும் தேசியளவிலான மெரிட் ஆர்டர் விநியோகம் மின் உற்பத்தி விலையைக் கட்டுப்படுத்த உதவியது.
சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின் இணைப்பு:
சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, கடந்த மார்ச் 31ம் தேதி வரை மொத்தம் 2.817 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக மின் நுகர்வு குறைந்ததால், மின்துறையில் ஏற்பட்ட பணப்புழக்க பிரச்னையைக் குறைக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பணப்புழக்க திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், மின் நிதி நிறுவனம் (PFC) மற்றும் ஆர்இசி நிறுவனத்துக்கு நீண்ட கால சிறப்பு கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டன.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் கொண்டு வந்தது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் சில பகுதிகளில் 18,734 வீடுகள் தவிர, மற்ற வீடுகளுக்கு 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக மாநிலங்கள் தெரிவித்தன. அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 31ம் தேதி நிலவரப்படி 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. செளபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2.817 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின்சார துறையில் பணப்புழக்க பிரச்னையை தீர்க்க ஆர்இசி மற்றும் பிஎப்சி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு ரூ.1,35,537 கோடியை ஒதுக்கீடு செய்தன. இவற்றில் ரூ.79,678 கோடி விநியோகிக்கப்பட்டது.
மின்சாதன உற்பத்தி திட்டம்:
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி சாதனங்களின் இறக்குமதியை குறைப்பதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்சாதன உற்பத்தி மண்டலங்கள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி மூன்று ஆண்டுகளுக்குள், மூன்று உற்பத்தி மண்டலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மண்டலங்கள் அமைக்க நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் பொது கட்டமைப்பு வசதிகள் (CIF) மற்றும் பொது பரிசோதனை வசதிகள் (CTF) அமைக்கப்படும். இந்த உற்பத்தி மண்டலங்களுக்கான தேர்வு அளவுகோல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
–எஸ்.சதிஸ் சர்மா.