குறைந்த தூரத்தில் டேங்க்குகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக ஏவுகணை(MPATGM): டிஆர்டிஓ வெற்றிகர சோதனை.

  •    Low weight, fire and forget Man Portable Anti-tank Guided Missile
  •   Miniaturised Infrared Imaging seeker
  •   Major boost to Army and AatmaNirbhar Bharat
  •   Raksha Mantri congratulates DRDO

In a major boost towards AatmaNirbhar Bharat and strengthening of Indian Army, Defence Research and Development Organisation (DRDO) successfully flight-tested indigenously developed low weight, fire and forget Man Portable Antitank Guided Missile (MPATGM) on July 21, 2021. The missile was launched from a man portable launcher integrated with thermal site and the target was mimicking a tank. The missile hit the target in direct attack mode and destroyed it with precision. The test has validated the minimum range successfully. All the mission objectives were met. The missile has already been successfully flight tested for the maximum range. 

The missile is incorporated with state-of-the-art Miniaturized Infrared Imaging Seeker along with advanced avionics. The test brings the development of indigenous third generation man portable Anti-Tank Guided Missile close to completion. 

Raksha Mantri Shri Rajnath Singh has congratulated DRDO and the Industry for the successful test. Secretary Department of Defence R&D and Chairman DRDO Dr G Satheesh Reddy congratulated the team for the successful test

கையில் எடுத்துச் செல்லும் வகையில் குறைந்த எடையுடன் கூடிய, டேங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை

  • மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவியுடன் கூடிய ஏவுகணை
  • ராணுவம் மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு பெரிய ஊக்கம் அளிக்க கூடியது.
  • டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுடன் கூடிய, டேங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ஏவுகணை, கையில் எடுத்துச் செல்லக்கூடிய லாஞ்சரில் இருந்து ஏவப்பட்டது. டேங்க் போன்று உருவாக்கப்பட்ட இலக்கை, இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. குறைந்த தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. அதிகபட்ச தூரம் செல்லும் சோதனையை, இந்த ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்தது. இந்த ஏவுகணையில் அதிநவீன மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவி மற்றும் மேம்பட்ட ஏவியானிக்ஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை மூலம், கையில் எடுத்துச் செல்லக்கூடிய 3 ஆம் தலைமுறை ஏவுகணை உருவாக்கம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததற்கு டிஆர்டிஓ மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகர சோதனைக்காக, இந்த குழுவினருக்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்.

Leave a Reply