தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து லடாக் மற்றும் லே அதிகாரிகளுடன் தலைமை தொழிலாளர் ஆணையர் ஆய்வு.

Chief Labour Commissioner and DG Labour Bureau Shri DPS Negi reviewed the status of sensitization and implementation of labour laws and labour codes in various developmental projects in Leh. In separate meetings with project officials from UT Ladkak, Powergrid, NHPC, BRO, CPWD, BPCL, IOCL, HPCL, NHIDCL and AAI during the last two days, Shri Negi enquired about the prevailing labour issues at their project sites. He also studies different activities undertaken there.

Shri Negi also met workers at Karutungse, and Pangong Road, who hailed from Jharkhand, Bihar, Nepal as also local Ladakhis, and enquired about their well-being. Shri Negi explained to them their rights at length.

Senior officers in-charge of the projects briefed the Chief Labour Commissioner (Central) regarding the compliance with various labour laws. Shri Negi expressed satisfaction about the compliance status of labour laws at their projects. Shri Negi explained to the officials and contractors about the importance of implementation of labour laws and new labour codes. He appealed the workers to register themselves in the upcoming NDUW Portal for migrant workers, which is being launched soon by Labour & Employment Ministry.

Shri Negi appreciated the design of shelters proposed to be procured by project officials.

லே பகுதியில் பல வளர்ச்சி திட்டங்களில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தலைமை தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் அலுவலக தலைமை இயக்குனர் திரு டிபிஎஸ் நெகி ஆய்வு செய்தார். லடாக் யூனியன் பிரதேசம், பவர்கிரிட், என்எச்பிசி, பிஆர்ஓ, சிபிடபிள்யூடி, பிபிசிஎல், ஐஓசிஎல், எச்பிசிஎல், என்எச்ஐடிசிஎல் மற்றும் ஏஏஐ திட்ட அதிகாரிகளுடன், தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கடந்த 2 நாட்களாக தனித்தனியாக நெகி விசாரித்தார். அங்கு நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

லடாக்கில் கருதுங்சே மற்றும் பாங்காங் சாலையில் ஜார்கண்ட், பீகார், நேபாள தொழிலாளர்கள், உள்ளூர் லடாக் தொழிலாளர்கள் ஆகியோரை திரு நெகி சந்தித்து அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அவர்களின் உரிமைகள் குறித்து நெகி விளக்கினார்.

பல்வேறு தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுவது தொடர்பாக, தலைமை தொழிலாளர் ஆணையரிடம் திட்டப் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரிகள் எடுத்து கூறினர். இது குறித்து திரு நெகி திருப்தி தெரிவித்தார். தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் திரு நெகி விளக்கினார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிதாக தொடங்கவுள்ள NDUW இணையதளத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொழிலாளர்களுக்காக, திட்ட அதிகாரிகளால் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள கூடாரங்களின் மாதிரிகளையும் நெகி பாராட்டினார்.

திவாஹர்.

Leave a Reply