MV Kanchan stranded because of no power amid inclement weather.- ICG’s MV Hermeez rescues all the 12 crew in a swift operation.
- More ICG vessels deployed for assistance.
Indian Coast Guard rescued all the 12 crew of Motor Vessel (MV) Kanchan stranded off Umargam, Gujarat on July 21, 2021. Maritime Rescue Coordination Centre (MRCC) Mumbai had received information from DG Communication center, Mumbai in the afternoon of July 21, 2021 that MV Kanchan is stranded due to contamination in fuel thereby rendering the engine non-operational and no electrical power onboard, amid inclement weather. Later in evening, the master of the vessel intimated that MV Kanchan, carrying steel coils as cargo, had dropped anchor and was tilting towards Starboard (right) side.
The MRCC Mumbai instantly activated the International Safety Net (ISN) and MV Hermeez was immediately diverted towards the distressed vessel. Braving rough seas, MV Hermeez safely evacuated all the 12 crew of MV Kanchan in a swift night operation.
Emergency Towing Vessel (ETV) Water Lily has also been deployed by DG Shipping, Mumbai for assisting the stranded vessel. In addition, two tugs have been deployed by the vessel owners to render assistance to the vessel.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் மின்சாரம் இல்லாததால் எம்.வி.கஞ்சன் கப்பல் சிக்கித் தவித்தது. இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) எம்.வி. ஹெர்மீஸின் விரைவான நடவடிக்கையால் 12 பேரும் மீட்கப்பட்டனர். மேலும் சில ஐ.சி.ஜி கப்பல்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜூலை 21, 2021 அன்று குஜராத்தின் உமர்காமில் சிக்கித் தவித்த மோட்டார் கப்பல் (எம்.வி) கஞ்சனின் 12 பணியாளர்களையும், இந்திய கடலோர காவல்படை மீட்டது. மும்பை கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (எம்.ஆர்.சி.சி), எம்.வி. காஞ்சன் கப்பல் எரிபொருள் மாசுபாட்டால் சிக்கித் தவிக்கிறது என்றும் இதனால் எஞ்சின் செயல்படவில்லை என்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் மின்சாரமும் இல்லை என்றும் மும்பை டி.ஜி தொடர்பு மையத்திலிருந்து ஜூலை 21 மதியம் தகவல் வந்தது. அன்று மாலை, கப்பலின் மாஸ்டர், எஃகு சுருள்களை ஏற்றி வந்த எம்.வி. கஞ்சன், நங்கூரத்தை கைவிட்டு, ஸ்டார்போர்டு (வலது) பக்கமாக சாய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
எம்.ஆர்.சி.சி மும்பை உடனடியாக சர்வதேச பாதுகாப்பு வலையை (ஐ.எஸ்.என்) செயல்படுத்தியது, எம்.வி. ஹெர்மீஸ் கப்பல் உடனடியாக சிக்கலிருக்கும் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் சூழலிலும், எம்.வி.ஹெர்மீஸ் துணிந்து செயல்பட்டு, எம்.வி. காஞ்சனின் 12 பணியாளர்களையும் ஓர் இரவில் விரைவாக மீட்டது.
சிக்கித் தவிக்கும் கப்பலுக்கு உதவுவதற்காக அவசர தோண்டும் கப்பல் (ஈ.டி.வி) வாட்டர் லில்லி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
–திவாஹர்.