தமது மாதாந்திர ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் உரையில் சண்டிகரை அடிப்படையாகக் கொண்ட உணவகத்தின் உரிமையாளருக்கு பிரதமர் பாராட்டு

In his monthly radio address to the nation ‘Mann Ki Baat’, the Prime Minister, Shri Narendra Modi today lauded a Chandigarh-based food stall owner for his self-driven initiative in motivating others to get themselves vaccinated against COVID-19. During his address, the Prime Minister said that on suggestion of his daughter and niece, a food stall owner Sanjay Rana started feeding free chole bhature to those who had got the covid vaccine.

The owner sells chole bhature on a cycle in Sector-29, Chandigarh and to have this meal for free, one has to show that one has got the vaccine administered on the very day, said Prime Minister. He appreciated this effort and said that this act proves that for the welfare of the society, spirit of service and duty are required more than money.

xxxxxxxxxx

வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கும் தன்னார்வ முயற்சியில் ஈடுபட்டு வரும் சண்டிகரை அடிப்படையாகக் கொண்ட உணவகத்தின் உரிமையாளருக்கு இன்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

தமது மகள் மற்றும் மருமகளின் யோசனையின்படி, திரு சஞ்சய் ரானா என்ற அந்த உணவக உரிமையாளர், கொவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு சோளா பூரியை இலவசமாக வழங்குகிறார் என்று தமது உரையின்போது பிரதமர் குறிப்பிட்டார்.

சண்டிகரின் செக்டர்-29-இல் மிதிவண்டியில் சோளா பூரி விற்பனை செய்யும் அவரது உணவை இலவசமாகப் பெறுவதற்கு, அந்நாளிலேயே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அவரது இந்த முயற்சியைப் பாராட்டிய பிரதமர், சமூக நலனிற்கு செல்வத்தை விட, சேவை மனப்பான்மை, கடமை ஆகியவை அதிகம் தேவை என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்.

Leave a Reply