தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு!-உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் பேசும் நல்உள்ளங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

தமிழறிஞர் இரா.இளங்குமரனார்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் குறிப்பிடத்தகுந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய புலவர் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல தமிழ் பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக இருப்பினும், குறிப்பாக, இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு மிகப் பெரிய சான்றாக உள்ளது.

குறள் வழியில் நின்று; திருவள்ளுவர் தவசாலை அமைத்து; வாழும் வள்ளுவராகவே திருச்சி, அல்லூரில் வாழ்ந்து வந்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாரின் மறைவு, உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் பேசும் நல்உள்ளங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply