ஜார்கண்ட் மாநிலம், தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் என்பவர், ஹிராப்பூரில் தனது வீட்டிற்கு அருகில் நேற்று (28.07.2021) நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
வெறிசோடி இருந்த சாலையோரம் நடைப்பயிற்சி சென்ற அவர் மீது, பின்னால் சென்ற ஆட்டோ ஒன்று திட்டமிட்டு மோதிவிட்டு நிற்காமல் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், அதே சமயம் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து விரிவான விசாரணைக்கு ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
23-12-1972 அன்று பிறந்த உத்தம் ஆனந்த், 29-05-2002 அன்று நீதிபதியாக பணியில் சேர்ந்தார். 18-09-2020 முதல் ஜார்கண்ட் மாநிலம், தன்பாக் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், அநியாயமாக ஆட்டோ மோதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 31-12-2032 -ல் பணி ஓய்வு பெறவேண்டிய நீதிபதி உத்தம் ஆனந்த், சமூக விரோதிகளின் சதித்திட்டத்தால் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
மிகுந்த வேதனை அளிக்கிறது….
இது நாடுதான என்று சந்தேகம் எழுகிறது…..