Vice-Chancellor, Professor Gurmeet Singh inaugurated a sophisticated instrument, X-ray Photoelectron Spectrometer (XPS), sponsored by the Department of Science and Technology-Promotion of University Research and Scientific Excellence (DST-PURSE) program at the Central Instrumentation Facility (CIF), in the presence of Prof. Bala. Manimaran, the Centre Head of CIF, Prof. V. V. Ravi Kanth Kumar, Professor and Head, Department of Physics and the DST-PURSE Phase-II Coordinator, Dr. K. Suresh Babu, Faculty in charge of XPS and Assistant Professor of Nanoscience & Nanotechnology and the staff members of CIF.
The XPS is a versatile instrument to analyze the surface chemistry of a material with nanometer accuracy. Many instances surface properties differ from that of the inside. XPS provides elemental chemical information and its concentration from the surface. Its uniqueness to differentiate oxidation states of the elements and its distribution along material is a highly valuable for advanced researchers in material science, physics, chemistry, nanotechnology, engineering and biological sciences. The surface mapping of elements gives pictorial information on the location and distribution of elements. Through the depth profiling mode, the material surface can be sliced by nanometer progressively the corresponding chemistry can be analyzed with depth.
Based on the research contribution from the research scholars and faculty members of the Pondicherry University, the XPS was funded (Rs. 2.87 crores) by the Department of Science and Technology, Government of India under Promotion of University Research and Scientific Excellence (PURSE) Phase-II. It is installed at the Centre for Instrumentation Facility (CIF) of Pondicherry University and is available to students/scholars/researchers/industries for their research works in surface science. Understanding the surface properties through XPS is likely to add more momentum to the ongoing cutting-edge research in Pondicherry University.
This is stated in a press release issued by the Pondicherry University.
xxxxxxxx
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடுவண் கருவி மயமாக்கல் மையம் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற உலகத் தரத்திலான நவீன தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முனைவர் பட்ட மாணவர்கள் பல்வேறு நவீன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிகளை மேலும் ஊக்கப்படுத்துகின்ற வகையில் புதுவைப் பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை, பல்கலைக்கழக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அறிவியில் மேம்பாட்டுத் திட்ட நிதி உதவியோடு ரூ.2.7 கோடி மதிப்பிலான நவீன ஊடுகதிர் மின் அணு நிறமாலைக் அளவீட்டு தொழில் நுட்பக் கருவி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஆராய்ச்சி மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடுவண் கருவி மயமாக்கல் மைய ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்தது.
மையத்தின் தலைவர் பேராசிரியர் பால.மணிமாறன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரவி காந்த் குமார் மற்றும் உயிர் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கருவியை ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரப்பணித்தார்.
அப்போது பேசிய அவர், வேதியியல் பகுப்பாய்வுத் துறையில் பெரும் பயனைத் தரக்கூடிய புதிய நவீன தொழில் நுட்பக் கருவியைப் பயன்படுத்தி மாணவர்களும் பேராசிரியர்களும் உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி தனிமங்களின் காற்று நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதல் கண்டறிய முடியும். அதனால் வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் உயிரியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்பதால் மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சிக் கூடங்களில் ஆய்வு செய்வதை ஆர்வத்தோடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–திவாஹர்